தமிழில் Blogger எப்போ?
ஹிந்தியில் நேரடியாக blog எழுத blogger வசதி செய்து தந்துள்ளது போல தமிழிலும் எழுத வசதி செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும்.
http://ideasmoney.blogspot.com
http://easycrafts.blogspot.com
செந்தமிழ் நாடெனும் போதினிலே , இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
ஹிந்தியில் நேரடியாக blog எழுத blogger வசதி செய்து தந்துள்ளது போல தமிழிலும் எழுத வசதி செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும்.
http://ideasmoney.blogspot.com
http://easycrafts.blogspot.com
நெடு நாள் கழித்து தமிழ் படிக்கும் ஆவலில் , இந்த இரு பத்திரிகைகளையும்
வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.
இந்த இரண்டிலுமே நான் பொதுவாக கண்டது,
1. சினிமாவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம்.
2. சினிமா உலகை சார்ந்தோரின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் படங்கள்.
ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் நடந்த திருமணத்தின் photo album மற்றும் extensive coverage, ஒரு இயக்குநர் மகனின் திருமணம் , ஒரு நடிகரின் ஹனிமூன் report, சீமந்தம்,குழந்தை பிறப்பு .....இப்படி பல தொடந்து வாரா வாரம்.
இது தவிர வெளி வந்த படங்களின் செய்தி, வரப்போகும் சினிமா பற்றி கட்டுரைகள்,நடிக நடிகையரின் கேள்வி பதில்கள்...........அனைத்திற்கும் உச்சமாய்......cinema special இதழ் ( எல்லா இதழ்களுமே அது தானேப்பா!!!)
"சினிமாவை பற்றி எழுதாதே எனவில்லை, அதையே எழுதாதீர் என்கிறேன்."
மக்கள் விரும்புவது இது தான் என்று கூறலாம் அல்லது " உன்னை யார் படிக்க சொன்னது?" எனலாம்.எனக்கு உறுத்தியது ஆதலால் இதை எழுதுகிறேன்....விடிவு வரும் என நம்பிக்கையில்!!!
காலை தினம் பத்து மணிக்கு
வருவாய் என எதிர்பார்த்து,
காத்திருந்த காலங்கள்
திரும்பத் தான் வாராதா.
கடிகாரம் காட்டும் மணி
சரி தானா என்று நான்,
நொடிக்கு நூறு முறை அம்மாவை
நச்சரித்தவை நினைவில் மட்டும்.
பத்து மணி ஆனவுடன்
பதைபதைத்து வாசல் வந்து,
அவள் வந்துவிட்டால் வசந்தம் தான்
வாராவிடில் ஏமாற்றம்.
சித்தி அத்தை மாமி மாமன்
பாட்டி தாத்தா என பலரும்,
அனுப்பி வந்த கடிதங்கள்
நின்று போயின காலத்தால்.
ஹலோ ஹலோ என்று சொல்லி
அரை மணிக்கொரு முறை பேசினாலும்,
கடிதத்தில் முகம் பார்த்து எழுத்துக்களில்
மனமறிந்து இருந்ததொரு காலம் தான்,
விஞ்ஞானம் வளர்ந்துவிட
மனிதன் எழுதுவதே மறந்து வர,
காலத்தின் சக்கரத்தில்
சிக்கி இறந்து வரும்
கார்டு , கடுதாசி ப்ற்றி
இனி காவியங்கள் தான் பேசும்.