ஆனந்த விகடன் , குமுதம் பத்திரிகைகளுக்கு ஒரு தலையங்கம்

நெடு நாள் கழித்து தமிழ் படிக்கும் ஆவலில் , இந்த இரு பத்திரிகைகளையும்
வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

இந்த இரண்டிலுமே நான் பொதுவாக கண்டது,

1. சினிமாவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம்.

2. சினிமா உலகை சார்ந்தோரின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் படங்கள்.

ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் நடந்த திருமணத்தின் photo album மற்றும் extensive coverage, ஒரு இயக்குநர் மகனின் திருமணம் , ஒரு நடிகரின் ஹனிமூன் report, சீமந்தம்,குழந்தை பிறப்பு .....இப்படி பல தொடந்து வாரா வாரம்.

இது தவிர வெளி வந்த படங்களின் செய்தி, வரப்போகும் சினிமா பற்றி கட்டுரைகள்,நடிக நடிகையரின் கேள்வி பதில்கள்...........அனைத்திற்கும் உச்சமாய்......cinema special இதழ் ( எல்லா இதழ்களுமே அது தானேப்பா!!!)

"சினிமாவை பற்றி எழுதாதே எனவில்லை, அதையே எழுதாதீர் என்கிறேன்."

மக்கள் விரும்புவது இது தான் என்று கூறலாம் அல்லது " உன்னை யார் படிக்க சொன்னது?" எனலாம்.எனக்கு உறுத்தியது ஆதலால் இதை எழுதுகிறேன்....விடிவு வரும் என நம்பிக்கையில்!!!